Header Ads

  • சற்று முன்

    சமையல் எரிவாயு விலை மேலும் உயர்வு! - பொதுமக்கள் ஆவேசம்!

     


      வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் 15  ரூபாய்  உயர்த்தப்பட்டுள்ளது இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

      பெட்ரோல-டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைத்து வருகின்றன. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. சில நேரங்களில் 3 முறை கூட மாற்றி அமைக்கப்படுகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் 700 ரூபாயாக இருந்த சிலிண்டரின் விலை செப்டம்பர் மாத்தில்  900 ரூபாயாக அதிகரித்தது. தற்போது 15 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் கேஸ் சிலிண்டர் விலை 300  ரூபாய் அதிகரித்துள்ளது.

      

     

     
      சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் 915  ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 35  அதிகரித்து 1865 க்கு விற்கப்படுகிறது. கேஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வருவது இல்லத்தரசிகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே கேஸ் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad