Header Ads

  • சற்று முன்

    கோழி திருட்டை தடுக்க மின்வேலி அமைத்த- முதிய தம்பதியின் உயிரைப் பறித்த சோகம்!!!

     


    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கெட்டிசெவியூர் அரளிமலை பிரிவை சேர்ந்த விவசாயியான ஆண்டியப்பன், தனது வீட்டின் அருகே குடிசை அமைத்து 40-க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்துள்ளார்.

    சில தினங்களுக்கு முன் ஆண்டியப்பன் வளர்த்து வந்த கோழிகளில் இரண்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனை தடுக்கும் விதமாக குடிசை பகுதியை சுற்றி மின்வேலி அமைத்த ஆண்டியப்பன். அதுகுறித்து மனைவி முனியம்மாளிடம் தெறிவிக்காமள் விட்டிருக்கிறார். அங்கு மின் இனைப்பு இருப்பது தெறியாமல் முனியம்மாள் கோழிகளுக்குத் தீவனம் வைப்பதற்காகச் சென்று ஞாயிற்றுக்கிழமை காலை மின்சாரம் தாக்கி அலறியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த ஆண்டியப்பன் மனைவியை காப்பாற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் 

    அதேநேரம் ஆண்டியப்பன் மகன், மருமகள், பேரக் குழந்தைகள் என அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அவரில் ஒருவர் கூட மின்வேலி குறித்து தெறியாமல் சென்றிருந்தால் மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்பாக அமைந்திருக்கும் என்கின்றனர் போலீசார்.

    அது சட்டவிரோதமான செயல் ஆண்டியப்பன் அமைத்த மின்வேலியில் சிக்கி கோழி திருட வந்தவன் இறந்திருந்தாலும் அவருக்கு சட்டம் தண்டனையை வழங்கி இருக்கும்.

    எனவே பயிர்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றால். உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தாத வகையிலான லேசார் மின்வேலி மற்றும் திருட்டுகளை தடுக்கும் விதமாக சிசிடிவி கேமராக்கள் பேன்றவற்றை பொருத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad