Header Ads

  • சற்று முன்

    சத்தீஸ்கர் முதலமைச்சர் லக்னோ விமான நிலையத்தில் தர்ணா! --- உ.பி.யில் பெரும் பரபரப்பு



            உத்திரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் நேற்றைய முன்தினம் விவசாயிகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் மகன் கார் ஏற்றி கொன்ற நிலையில் உயிரிந்த விவசாயிகளின் குடும்பத்தினரை காங்கிரஸ் உள்ளிட்ட பலகட்சிகளின் தலைவர்கள் சந்திக்க முயன்று வருகின்றனர். 

         ஏற்கனவே காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை உ.பி. யில் போலீஸ் காவலில் வைத்துள்ள நிலையில் சத்தீஸ்கர்  பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் உ.பி. வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையையும் மீறி இன்று லக்னோ வந்த சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஸ் பாஹீலை லக்னோ விமான  நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார். ஆனால் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் நான் லக்கிம்பூர் செல்லவில்லை வேறு வேலை காரணமாக வந்துள்ளேன் என்னை விடுங்கள் என கூறினார்.

                 

         உங்களை அனுமதிக்க கூடாது என எங்களுக்கு உத்தரவு என பாதுகாப்பு அதிகாரிகள் கூற என்னை விடவில்லை என்றால் நான் இங்கேயே அமர்ந்து கொளகிறேன் என கூறி தர்ணாவில் ஈடுபட்டார். ஏற்கனவே பிரியங்கா காந்தி உள்ளிட்ட 11 பேர் மீது உ.பி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

     









    No comments

    Post Top Ad

    Post Bottom Ad