Header Ads

  • சற்று முன்

    கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் கனமழை காரணமாக வீடு சுவர் இடிந்து விழுந்து ஏழு பேர் உயிரிழப்பு.



                                                                                   

    •       கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் பாதல் அங்கள்கி என்ற கிராமத்தில் கனமழை காரணமாக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    •       கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் பெலகாவி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்ததின் காரணமாக களிமண் வீடு சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் உள்ளே இருந்த ஏழு பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் சுவர் இடிந்து விழுந்த வீட்டின் பக்கத்து வீட்டை சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவனும் உயிரிழந்துள்ளனர்.
    •       இந்த சம்பவம் புதன்கிழமை மாலை சுமார் 8 மணி அளவில் நடந்ததாக சின்னூர் காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர். வீடு இடிந்து விழுந்து பலியான குடும்பத்தின் தலைவன் பீமப்பா மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இடிந்து விழுந்த வீட்டை சுமார் 8 வருடங்களுக்கு பீமப்பா களிமண் கொண்டு கட்டியுள்ளார் வீடு இடிந்து விழும் நிலையில் இருந்த காரணத்தினால் அன்மையில் புது வீடு கட்டி அந்த வீட்டில் பீமப்பா குடும்பம் 15 நாட்களுக்கு முன்தான் குடிபெயர்ந்தது.
    •       இன்று கனமழை பெய்து வந்த காரணத்தினால் வீடு எவ்வாறு உள்ளது என பரிசோதிக்க பீமப்பாவை தவிர்த்து அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அங்கு சென்றபோது திடீரென வீடு இடிந்து விழுந்ததில் துரதிஸ்டவசமாக இடிபாட்டில் சிக்கி அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
    •       விபத்து நடந்த உடன் காவல்துறையினரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப்பணியில் ஈடுபட்ட போது 5 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர் இருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். ஒரே கிராமத்தில் கனமழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பாதல் அங்கள்கி கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது இதனிடையே உயிரிழந்தவர்களுக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 





    உயிரிழந்தவர்கள்.

     

    1. கங்காவா காங்கவி (50)
    2. சத்யாவா காங்கவி (45)
    3. பூஜா காங்கவி (8)
    4. சவிதா காங்கவி (28)
    5. லட்சுமி காங்கவி (15)
    6. அர்ஜுன் காங்கவி (45)
    7. கசவா கொலாபன்னவர் (8)


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad