Header Ads

  • சற்று முன்

    பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு...



    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கு கோயில்களில் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்தும், அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களை அனுமதிக்க வலியுறுத்தியும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    நாடு முழுவதும் 12 இடங்களில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தவகையில் சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் அருகே, பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 600 பேர் பங்கேற்றனர். 

    இந்நிலையில் சட்ட விரோதமாக கூடுதல், நோய்த்தொற்று பரவும் சூழலில் கவக்குறைவாக செயல்படுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைத்தல், நோய்த்தொற்று  பரவல் தடுப்புச் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கு கடற்கரை காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad