Header Ads

  • சற்று முன்

    முதலமைச்சர் நேரில் திடீர் ஆய்வு! பொதுமக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆராவாரம்!!

     


     தலைமைச் செயலகத்திற்கு இன்று வழக்கம் போல் வந்த முதலமைச்சர் தனது  அலுவலகத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்டார்.  அலுவல்களை  முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டபோது  முதலமைச்சரின் தனிப்பிரிவில்  திடீர் ஆய்வு மேற்கொண்டார். தனது அலுவலகத்தில் இருந்து  நடந்தே வந்த முதலமைச்சர் அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில்  உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

        முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலத்திற்கு திடீரென முதலமைச்சரே நேரில் வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்கு ஆடினர்.  உங்களின் குறைகளை புகாராக அதிகாரிகளிடம் கொடுக்குமாறும்  அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் உறுதி அளித்தார். 

        இதைத்தொடர்ந்து முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியான ஷில்பா பிரபாகர் தனிப்பிரிவில் பெறப்படும் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள்,  நிலுவையில் உள்ள புகாரின்  நிலை ஆகியவை குறித்து முதலமைச்சரிடம் விளக்கினார். சுமார் 10 நிமிடங்கள் ஆய்வை முடித்துக்கொண்ட முதலமைச்சர் தனது இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

    இந்த ஆய்வின்போது தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும்  முதல்வரின்  தனிச்செயலாளர்கள் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

     

     

     

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad