Header Ads

  • சற்று முன்

    தனியார் மருத்துவமனைகளின் காப்பீட்டு உரிமை ரத்து செய்யப்படும் - அமைச்சர் மா.சு எச்சரிக்கை...

     


     

    பொதுமக்களின்  காப்பீட்டுத் திட்டம் முடிந்துவிட்டால், அதனை காரணம் காட்டி தனியார் மருத்துவமனை சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறினால் அதன் காப்பீட்டு உரிமை ரத்து செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் எச்சரித்துள்ளார்.

    சென்னை டி.எம்.சி வளாகத்தில்  மத்திய அரசிடமிருந்து பெற்ற  17 லட்சம் தடுப்பூசிகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா,சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 70% பேருக்கு நோய் எதிர்ப்பாற்றல் கூடியுள்ளதாக தெரிவித்தார். 

    மேலும், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக ஐந்து கோடியே ஒரு லட்சத்து முப்பதாயிரத்து முன்னூற்று முப்பத்து மூன்று (5,01,30,333) பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 64% பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும், 22% பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டதாக தெரிவித்தார். 

    வேகமாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசும் தடுப்பூசி வழங்கி வருகின்றனர் எனவும், இன்று ஒருநாள் மட்டும் 17 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன, இது மிகப்பெரிய மகிழ்ச்சி எனவும் அமைச்சர் கூறினார். 6 லட்சத்து 81 ஆயிரம் டோஸ் கோவாக்ஸின் கையிருப்பு உள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.

    தமிழகத்தில் 330 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார். மேலும் தனியார் மருத்துவமனைகள் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும், இல்லையேல் ஆரம்பத்திலேயே அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட வேண்டும் எனக் கூறினார். அதைவிடுத்து காப்பீட்டுத் திட்டம் முடிந்தவுடன் சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறினால், அந்த மருத்துவமனையின் காப்பீட்டு உரிமை ரத்து செய்யப்படும் என எச்சரித்தார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad