Header Ads

  • சற்று முன்

    திருடப்பட்ட கதை - இயக்குநரால் பிரச்னையில் சிக்கிய சூர்யா..

     


    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் சூர்யா, தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து, 2டி எண்டெர்டெயின்மெண்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். '36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’, ’கடைக்குட்டி சிங்கம்’, ‘பசங்க 2’, ‘பொன்மகள் வந்தாள்’, ’சில்லுக்கருப்பட்டி’ , ‘சூரரைப் போற்று’ போன்ற படங்களை தயாரித்துள்ளார். சமீபத்தில் சூர்யா தயாரிப்பில் ஓடிடியில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘இராமே ஆண்டாலும்,இராவணன் ஆண்டாலும்’. 


     

    சிறிய பட்ஜெட் படமான “ராரா” வில் ரம்யா பாண்டியன், வாணி போஜன் ஆகியோர் நடித்திருந்தனர்.  விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்தப்படத்தை அரிசில் மூர்த்தி எழுதி இயக்கியிருந்தார். இந்நிலையில் இந்தப்படம் 2016 ஆம் ஆண்டு மராத்தியில் எடுக்கப்பட்ட “ரங்கா பாடங்கா” படத்தின் கதையை அப்படியே தழுவி எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

    இயக்குநர் இதைப்பற்றி எதுவும் சொல்லாததால், நடிகர் சூர்யாவுக்கு இந்த விஷயம் முன்னதாகவே தெரியாதாம்.  தற்போது இந்த தகவல் வெளியே வந்ததும், சூர்யா இயக்குநர் அரிசில் மூர்த்தியை அழைத்து கடிந்துகொண்டதாக கூறப்படுகிறது. அதோடு மராத்தி படத்தை எடுத்த, சம்பத்தப்பட்டவர்கள் அனைவருக்கும்  நடிகர் சூர்யா தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில்  இழப்பீடு கொடுத்து சரிகட்டியுள்ளார். 

    நடிப்பு , தயாரிப்பு என சூர்யா, ஜோதிகா என இவருவருமே பிஸியாக இருப்பதால் இந்தப்படம் மராத்தியில் முன்னதாகவே எடுக்கப்பட்ட படம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. அடுத்தடுத்து 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில், ஜோதிகா நடித்துள்ள ‘உடன்பிறப்பே’ படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. அதோடு சூர்யா நடித்துள்ள ‘ஜெய் பீம்’ படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad