Header Ads

  • சற்று முன்

    ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. - ரிசர்வ் வங்கி ஆளுநர்

     



    குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமுமின்றி 4% மாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

     வட்டி விகிதங்களின் மாற்றம் குறுத்து 2 மாதங்களுக்கு ஒரு முறை ஆலோசனை நடத்தப்படும்.. அவ்வாறு இன்று டெல்லியில் நடத்தப்பட்ட  நிதிக்கொள்கைக் குழு கூட்டத்தில், வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.  

    ’ரெப்போ ரேட்’ என்பது  ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். ரெப்போ ரேட் குறையும் போது, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையும். ஆனால்  இன்று நடைபெற்ற நிதி கொள்கைக்குழு  கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4% மாகவே தொடரும் எனவும், அதேபோல்  3.35% என்ற அளவிலேயே  தொடரும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

    மேலும், 2020 - 21  நிதியாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சிக்கான திட்டம் 9.5 % சதவிகிதத்திலேயே தக்கவைக்கப்படுகிறது. 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான மொத்த ஜிடிபி வளர்ச்சி 17.2% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad