Header Ads

  • சற்று முன்

    ”9 நாளும் நாங்க சொல்ற நிறத்தில் தான் உடை அணியனும்”.- யூனியன் பேங்கின் உத்தரவால் சர்ச்சை...

     


    நவராத்திரி பண்டிகை இந்துக்களால் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும்  ஒரு பண்டிகையாகும். விதவிதமான பொம்மைகளால் கொலு அமைத்து இதனைக் கொண்டாடுவர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை அக்.7 முதல் அக்.16 வரை கொண்டாடப்படுகிறது. 

    இந்நிலையில் நவராத்திரியை ஒட்டி யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் பொதுமேலாளர் ஏ.ஆர்.ராகவேந்திரா, வங்கி ஊழியர்கள் அனைவரும் தினசரி ஒரு நிற உடை என 9 நாட்களும் 9 நிற உடைகளில் வர வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.  அதன்படி அக்.7 அன்று மஞ்சள் நிறம், அக்.8 - பச்சை, அக்.15 - பர்ப்பிள் என 9 நாளுக்கும் அணிய வேண்டிய நிறத்தை குறிப்பிட்டு அந்த  சுற்றறிக்கை அமைந்துள்ளது. 

    இது உத்தரவாகவெ பிறப்பிக்கப்பட்டு, அவ்வாறு  உடைக்கட்டுப்பாட்டை கடைபிடிக்கவில்லை என்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூனியன் பேங்கின் இந்த செயல் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

     

    இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ’இப்படி ஒரு சுற்றறிக்கையை விடுக்க பொது மேலாளருக்கு யார் அதிகாரம் கொடுத்தது, பண்டிகை கொண்டாடுவது என்பது அவரவர் விருப்பம், தனிப்பட்ட உரிமை, இந்த செயல் அதிகார மீறல் என மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

    இதேபோல், கரூர் எம்.பி., ஜோதிமணியும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியதாவது, “ 9 நாட்களும் 9 நிற உடைகளில் வர வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியவர், எந்த உடையில் வர வேண்டும் என்பதை சொல்ல மறந்துவிட்டார் போல.. இதுபோன்ற அதிகார மீறல்களை ஒன்றிய அரசு ஊக்குவித்து வருகிறது. கடுமையான கண்டனத்திற்குரியது. உத்தரவை திரும்பப்பெற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad