Header Ads

  • சற்று முன்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூபாய் 1 கோடி வரை விற்பனை.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் வீட்டிற்கு தேவையான உபயோகப் பொருட்களை வாங்குவது புத்தாடைகள் வாங்குவது என அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்

    இந்நிலையில் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் நெல்லை மேலப்பாளையம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில்  பல்வேறு பகுதிகளில் ஆடுகள் விற்பனை  சூடு பிடித்துள்ளது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து ஆடுகளை வாங்குவதற்கு பொதுமக்கள் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர் அதேசமயம் ஆடுகளை வாங்குவதற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஆடுகளை வாங்கி சென்றனர்.

    நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையில் மூன்று கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது என்றும்

    அதேபோல் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற வார சந்தையில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை ஆடுகள் மற்றும் நாட்டுக் கோழிகள் விற்பனையானது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad