Header Ads

  • சற்று முன்

    தங்கத்தின் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு இன்று 144 ரூபாய் குறைவு..

     


    நாட்டின் பணவீக்க உயர்வுக்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிக அளவில் முதலீடு செய்தும் பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சாமானியர்கள் மட்டுமல்லாமல் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.

    இந்நிலையில் ஒரு சவரன் தங்கம் 37,000 ரூபாயை தாண்டி விற்பனையாகி வந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே விலை தொடர்ந்து குறைந்து வருகிறது அதேபோன்று இன்றும் தங்கத்தின் விலையில் சரிவு காணப்படுகிறது அதாவது சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து  4524 ரூபாய்க்கு விற்பனையாகிறது சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து 36,192 ரூபாய்க்கு விற்பனையாகிறது . அதேபோன்று வெள்ளியில் சிறிதளவு மாற்றம் காணப்பட்டு கிராம் ஒன்றுக்கு 0.70 ரூபாய் குறைந்து  67.20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று 67,200 ரூபாய் ஆக உள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad