Header Ads

  • சற்று முன்

    அடுத்த மூன்று மணி நேரத்தில் 14 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

     


    அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், மற்றும் காவிரி டெல்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தர்மபுரி, கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad