Header Ads

  • சற்று முன்

    ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 19 - பேர் பலி

     


    ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆட்சியை கைப்பற்றியது இந்நிலையில் தாலிபான்களின் ஆட்சிக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையில் இன்று மதியம் 2 மணி அளவில் அந்நாட்டின் தலைநகரமான காபுலில் உள்ள ராணுவ மருத்துவமணை அருகே இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த இரட்டை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.


    இந்த சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்ததாகவும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

    இந்நிலையில் காயமடைந்தவர்களின் நிலை மிக மோசமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. இந்த இரட்டை குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டை ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஹரொசன் பிரிவினர் நடத்தியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad