Header Ads

  • சற்று முன்

    சேலத்தில் ஹெல்மெட் வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம்..

     


    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக தக்காளியின் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் சேலம் மாவட்டத்தில் உள்ள மொத்த சந்தைகளில் தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும். சில்லரை வியாபாரிகள் 130  முதல் 150 ரூபாய் வரையிலும் விற்பனை செய்து வருகின்றனர்.


     

    சேலம் மாவட்டத்தில் முக்கிய சந்தைகளாக விளங்கும் வாழப்பாடி, தலைவாசல், சந்தைகளில் தக்காளியின் விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரு மடங்கு அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

     

    இதனை அடுத்து சேலம் கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜம் ஜம் ஹெல்மெட் கடை தலைக்கு ஹெல்மெட் முக்கியம் சமையலுக்கு தக்காளி முக்கியம் என்ற வாசகத்துடன் சிறப்பு சலுகையை அறிவித்தது. இதில் 449 ரூபாய்க்கு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இச்சலுகை நாளை வரை மட்டுமே என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



     
    இதனை அறிந்த பொதுமக்கள் ஹெல்மெட் வாங்கி கொண்டு தலா ஒரு கிலோ தக்காளியும் பெற்றுச் சென்றனர். மேலும் இதுகுறித்து கடையின் உரிமையாளர் முகமது காசிம் கூறுகையில் தக்காளி விலை ன்று 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் எங்களது கடையில் தலைக்கவசம் வாங்குபவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும், விவசாயத்தை காப்பாற்ற நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறினார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad