Header Ads

  • சற்று முன்

    பூமியிலிருந்து 25 அடி உயரத்துக்கு மேல் எழும்பிய உறை கிணறு.


     

    திருப்பதியில் கனமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் அங்குள்ள ஒரு வீட்டில் பூமிக்கு அடியில் இருந்து 25 அடி ஆழமுள்ள உறை கிணறு ஒன்று திடீரென மேலே ஏறியதை பார்த்த அப்பகுதியினர் பீதியில் ஆழ்ந்தனர்.

     கடற்கரை பகுதிகளிலும் மணல் பாங்கான பகுதிகளிலும் பக்கவாட்டிலிருந்து  மண் சரிவை தடுக்க சுடுமண்ணால் ஆன வளையங்களை கொண்டு அமைக்கப்படும் கிணறுகள் உரை கிணறுகள் என்று அழைக்கப்படுகின்றனர்.  திருப்பதி சுற்று வட்டாரத்தில் கடந்த சில வாரங்களாகவே கன மழை  பெய்து வரும் நிலையில்


     ஸ்ரீகிருஷ்ணா நகரில் உள்ள ஒரு வீட்டில் உரை கிணறு ஒன்று திடீரென சுமார்  25 அடி உயரத்துக்கு மேல் எழும்பி  இருக்கிறது  அதை பார்த்து அந்த வீட்டின் பெண் உரிமையாளர் பயந்துபோய் கூச்சலிட்டு இருக்கிறார்.


    அந்த கிணறு அமைந்திருக்கும் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் சிற்றோடை சென்றதாகவும் அதன் மீது தான் தற்போது வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும் தற்போது வரை நீரோட்டத்துடன் உள்ள அந்த சிற்றோடையில் கனமழை காரணமாக நீர் ஓட்டம் ஏற்பட்டு  மண் தளர்ந்து வளையங்கள் மேலே வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad