Header Ads

  • சற்று முன்

    நவம்பர் 26 ,2021 - இன்றைய ராசி பலன்கள்.

     


    இன்றைய  ராசி பலன்கள்;

     மேஷம்;  ராசி நேயர்களுக்கு என்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்கள் மற்றவர்கள் தலையிட்டால் தடைபடும். அலுவலகத்தில் மேல் அதிகாரிகளுடன் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும்.

    ரிஷபம்;  ராசி நேயர்களுக்கு இன்றைய தினம் மனநிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும், புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும், தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும்.

     மிதுனம்;  ராசி  நேயர்களுக்கு தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும், சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும், குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும், குருவின் பார்வையால் நிதி நெருக்கடிகள் நீங்கும்.

    கடகம்;  ராசி நேயர்களுக்கு வேலையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும், என்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறை வேறும், பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள், வருமானம் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும்.

    சிம்மம்; ராசி நேயர்களுக்கு குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி நிம்மதி அதிகரிக்கும், அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும், நண்பர்களின் உதவியால் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

    கன்னி;  ராசி நேயர்களுக்கு இன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இந்த நாள் அமையும், குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும், வேளையில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும், தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

    துலாம்;  ராசி நேயர்களுக்கு குருவின் பார்வையால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை உயரும், உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள், பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும்.

    விருச்சிகம்;  ராசி நேயர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது, நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும், உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டாகும்.

    தனுசு;  ராசி நேயர்களுக்கு  உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும், புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது, பண விஷயங்களில் கவனம் தேவை, வெளியிடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

    மகரம்;  ராசி நேயர்களுக்கு என்றும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும், திருமண சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு குறையும், கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.

    கும்பம்; ராசி நேயர்களுக்கு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவுடன் புதிய வரவுகளை பெறுவீர்கள், சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும், உடன்பிறந்தவர்களால் நன்மைகள் உண்டாகும்.

    மீனம்;  ராசி நேயர்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும், தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம், பிள்ளைகளால் சுப செய்திகள் தேடிவரும், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும், உற்சாகமான நாளாக அமையும்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad