Header Ads

  • சற்று முன்

    பேஸ்புக் காதலன் மீது ஆசிட் வீசிய 2 குழந்தைகளின் தாய்



     கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இளைஞர் அருண்குமார் இவருக்கு பேஸ்புக் மூலம் இடுக்கி மாவட்டம் அடிமல்லி பகுதியை சேர்ந்த ஷீபா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார்.   இவர்கள் இருவரும் சமூக வலைத்தளத்தில் நண்பர்களாக பழக ஆரம்பித்து ஒரு கட்டத்தில் இவர்கள் மனதில் காதல் பட்டாம்பூச்சி சிறகடித்து பறக்க ஆரம்பித்தது.

    இருவரும் பேஸ்புக்கில் காதல் கோட்டை கட்டியுள்ளனர். உன்னை திருமணம் செய்து கொள்வேன் என சத்தியம் செய்துள்ளார். இதனை அடுத்து காதல் பறவைகளாக சிறகடித்து உள்ளனர்.

    தீபாவிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது என்பதை தெரிந்துகொண்ட அருண்குமார் அவருடன் பேசுவதை தவிர்த்து உள்ளார். தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஷீபாவை விட்டு விலகியுள்ளார்.

    இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் உன்னுடன் நேரில் பேச வேண்டும் அடிமல்லிக்கு வா என கூறியுள்ளார். மேலும் பணம் கேட்டு ஷீபா மிரட்டியுள்ளார் இல்லையென்றால் உன் திருமணத்தையே நிறுத்தி விடுவேன் என கூறியுள்ளார்.

    இதனால் ஒரு குறிப்பிட்ட பணத்தை கொடுப்பதற்கு இளைஞர் ஒத்துக்கொண்டார். இதனை அடுத்து அருண் குமார் தனது நண்பருடன் பேசிய பணத்தை எடுத்துக்கொண்டு அங்கு வந்துள்ளார். இரும்புல்லா பகுதியில் உள்ள தேவாலயத்தில் இருந்த சந்திப்பு நடந்துள்ளது.

    அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஷீபா தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அருண்குமார் மீது வீசியுள்ளார். இந்த திடீர் தாக்குதலில் அருண்குமாருக்கு ஒரு கண் பார்வை பறிபோனது. ஆசிட் வீசும் போது அருண்குமார் தடுத்ததால் தீபாவுக்கு முகத்தில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் இளைஞர் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரையடுத்து ஷீபா கைது செய்யப்பட்டுள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad