Header Ads

  • சற்று முன்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு ரத்து - அரசு முடிவு!

     


    தமிழகத்தில் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. குரூப் 1, குரூப் 2 ,குரூப் 2-ஏ, குரூப் 4 என 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படுகின்றன.

    குரூப் 4 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. ஆனால், குரூப் 1 மற்றும் குரூப் 2 பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது.

    இந்நிலையில் குரூப்-2 நேர்முகத் தேர்விற்கு நகராட்சி ஆணையர் துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை, நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், என பல்வேறு பதவிகள் வருகின்றனர்.

    அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர் மற்றும் நேர்முக எழுத்தர் போன்ற பணியிடங்களுக்கு குரூப்-2ஏ தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

    இந்நிலையில் தமிழக அரசு பெரும்பாலான குரூப் 2 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வை நீக்க முடிவு செய்துள்ளது. குரூப்-2 பணிகளுக்கான குறிப்பிட்ட ஊதிய விகிதத்துக்கு மேல் உள்ள பதவிகளுக்கு மட்டும் நேர்முக தேர்வு நடத்தவும் எஞ்சிய பெரும்பாலான பணிகளுக்கு நேர்முகத் தேர்வை நீக்கவும் முடிவு செய்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    நேர்முகத்தேர்வு  நீக்கப்படும் குரூப்-2 பணிகள் அதாவது தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் ,உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர் வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், உள்ளிட்ட பதவிகள் அனைத்தும்  குரூப் 2 தேர்வின் கீழ் கொண்டு வரப்படும் என தெரிகிறது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad