Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதி கனமழை..


    தமிழகத்தில் தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து வரும், 18-ஆம் தேதி தெற்கு ஆந்திர தமிழக கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

    இதன் காரணமாக இன்று சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் கள்ளக்குறிச்சி மதுரை சிவகங்கை விருதுநகர் புதுக்கோட்டை தென்காசி தேனி டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும்

    வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வட தமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும் என்பதால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்து மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    செங்கல்பட்டு திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வரும் 21ஆம் தேதி வரை அனேக இடங்களில்  லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad