Header Ads

  • சற்று முன்

    ஒருமுறை சார்ஜ் - 425 கிமீ தூரம் பயணம் விரைவில் அறிமுகமாகும் புதிய எலக்ட்ரிக் கார் .

     


    எலக்ட்ரிக் கார் என்றாலே என்னவென்று தெரியாத நிலை மாறி தற்போது வீட்டிற்கு ஒரு எலக்ட்ரிக் பைக் அல்லது கார் வாங்க வேண்டும் என்று எண்ணும் அளவுக்கு இந்தியர்களிடையே அதிக அளவு ஈர்ப்பை பெற்றுள்ளது.

    அதுமட்டுமின்றி பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் அதிகளவு எலெக்ட்ரிக் வாகனங்களையே வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர் ஏனென்றால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படாது, பராமரிப்பு செலவு குறைவு, அதன் தோற்றம் போன்ற காரணங்களால் அதிக அளவு இந்திய வாடிக்கையாளர்களை கவர்கின்றது.



    இதனை தெரிந்துகொண்ட முன்னணி நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து அதனை அறிமுகம் செய்து வருகிறது இந்நிலையில் பிஎம்டபிள்யூ குழுமத்தின் புதிய ஐஎக்ஸ் என்ற புதிய எலக்ட்ரிக் கார் மாடலை அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது. என்றும். இதனை டிசம்பர் 13-ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மறுசுழற்சி செய்யும் வகையில் அபூர்வமான தனிமத்தினால் அமைக்கப்பட்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 425 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல முடியும் என்றும். ஐஎக்ஸ் எலக்ட்ரிக் காரை ஸ்டார்ட் செய்த ஆறு நொடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad