Header Ads

  • சற்று முன்

    ராணிப்பேட்டை அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 பேர் மீட்பு!


     

    ராணிப்பேட்டை மாவட்டம் மேச்சேரி அடுத்த மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார், சின்னராசு, விஸ்வநாதன், சுபாஷ், ரமேஷ், கோகுல், மற்றும் அமதன் நண்பர்களான இவர்கள் ஆற்றில் குளிப்பதற்காக நேற்று மாமண்டூர்-புதூர் கிராமங்களுக்கு இடையே உள்ள பாலாற்றுக்கு சென்றுள்ளனர்.

    அங்கு இவர்கள் மேம்பாலத்தில் இருந்தபடி ஆற்றில் குதித்துள்ளனர். அப்போது எதிர்பாரா விதமாக பாலாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஏழு பேரும் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் ஆற்றின் நடுவில் இருந்த ஒரு பாறையை பிடித்து கொண்டு தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர்.


     

    இதனை கண்ட அப்பகுதி மக்கள் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர் அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பேரிடர் மீட்பு படையினர் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ராணிப்பேட்டை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆற்றில் சிக்கிய 7 பேரையும் ரப்பர் படகு மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர் இந்த சம்பவம் மாமண்டூர் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்கனவே பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், எனினும்  பாலாற்றில் அதிகப்படியான வெள்ளம் வந்து கொண்டிருப்பதால் இளைஞர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நீர்நிலைக்கு செல்லாத படி பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad