Header Ads

  • சற்று முன்

    தற்கொலை செய்து கொள்வதற்காக காவிரி ஆற்றில் குதித்த 75 வயதுடைய முதியவர்: உயிருடன் மீட்கப்பட்டார்

     

     

    பள்ளிபாளையம்; ஈரோடு  கே.எஸ் நகரை சேர்ந்தவர் முருகேசன் இவர் 75 –வயதை மதிக்கத் தக்கவர். இவர் நேற்று காலை பழைய காவிரி ஆற்று பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பாலத்தின் தடுப்பு சுவரின் மீது ஏறி நின்று தற்கொலைக்கு முயன்றார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் சத்தமிட்டபடி ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் அவர் ஆற்றில் குதித்து விட்டார்.

    அவருக்கு நீச்சல் தெரிந்த காரணத்தால் அவரால் தண்ணீரில் முழுங்கவும் முடியாமல் மேலேறி வரவும் முடியாமல் தத்தளித்தார். இது குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த பள்ளிபாளையம் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் குதித்து முதியவரை மீட்டு அவரை சிகிச்சைக்காக அரசு பள்ளிபாளையம் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து விசாரித்தபோது முருகேசன் எச்..வி நோயாளி என்பதும், நோயின் தாக்கம் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. சமீபகாலமாக காவேரி பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பள்ளிபாளையம் பாலம் சூசைட் பாயிண்ட் ஆக மாறி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad