Header Ads

  • சற்று முன்

    ”மக்கள் தான் எஜமானர்கள்” - வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து சூர்யா ட்வீட்..

     


    ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக, நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் உயிர் நீர்த்தனர். இந்நிலையில் நேற்று குருநானக் பிறந்தநாளையொட்டி நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார்.

     

    பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சூர்யாவும், இறுதிவரை உறுதியாக போராடிய விவசாயிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

     

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ உழவே தலை..

    விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டுள்ளார். 

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad