Header Ads

  • சற்று முன்

    சிவகார்த்திகேயனின் ’டான்’ பட லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்...

     



    சிவக்கார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘டாக்டர்’. இதனைத்தொடர்ந்து சிவா தற்போது அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ’டான்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கணி, சூரி ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

     


    டான் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் சிவக்கார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மேலும் கே.எம். பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப்படத்தில் சிவா கல்லூரி மாணவராக நடித்திருக்கிறார். 

     


    கோவை கேபிஆர் பொறியியல் கல்லூரியில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. சமீபத்தில் டான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்த நிலையில் தற்போது மேலும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.  

     

     

     

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad