Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் அறிவிப்பு...

     


    உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும்திருவள்ளூர் ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும்., தென் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்  என  கூறப்பட்டுள்ளது. 

    21.11.2021 ( ஞாயிறு ) நாளை சேலம் , கள்ளக்குறிச்சி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    22.11.2021 (திங்கள்) அன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

    மேலும்  23.11.2021( செவ்வாய்) மற்றும்  24.11.2021 (புதன்) கிழமைகளில், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad