Header Ads

  • சற்று முன்

    இறந்துபோன நபர், 7 மணிநேரம் கழித்து மீண்டும் உயிர்பெற்ற அதிசயம்..

     


     

    மருத்துவர்களால் இறந்தவர் என அறிவிக்கப்பட்டு 7 மணி நேரம் சவக்கிடங்கில் இருந்த நபர் உயிர்பெற்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


    மொராதாபாத் நகராட்சியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்க்கும் 40 வயதான ஸ்ரீகேஷ் குமார்இரு சக்கர வாகன விபத்தில் சிக்கியிருக்கிறார்.  இதனையடுத்து அவர் அங்குள்ள மாவட்ட மருத்துவமனைக்கு இரவு நேரத்தில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர். 

    அதைத் தொடர்ந்து குளிர்பதன சவக்கிடங்கில் அவரது உடல் வைக்கப்பட்டது.  மறுநாள் உடல்  கூறாய்வுக்காக எடுக்கப்பட்ட போது, உடலில் அசைவு ஏற்பட்டதை அவரது உறவினர் கண்டிருக்கிறார். அதனை வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார். 

    இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. பலமுறை பரிசோதித்த பின்னரும் இதயத் துடிப்பு இல்லாததால் அவர் இறந்துவிட்டதாக அறிவித்ததாகவும், எப்படி அவருக்கு மீண்டும் உயிர் வந்தது என்பது தங்களுக்கே ஆச்சரியமாக  இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad