Header Ads

  • சற்று முன்

    பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு - வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

     


    உலகிலேயே பெட்ரோல், டீசல் விலை மீது அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. இங்கு அதிகபட்சமாக 69 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. அதாவது அடக்க விலையை விட இரு மடங்கு அதிகமாக விரி விதிக்கப்பட்டு விற்பனை செய்யபடுகிறது.

    பெட்ரோல் டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது. இதன் காரணம் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ளதால். இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது.

    சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.106.35-க்கும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து ரூ.102.59-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமுலுக்கு வந்துள்ளது.

    இந்தக் கொடிய கொரோனா காலத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வானது சாமானிய மக்களின் வாழ்கை கடும் சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர். மற்றும் வாகன ஓட்டிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad