Header Ads

  • சற்று முன்

    மனைவியின் கழுத்தை தாலி கயிற்றால் இறுக்கி கொலை செய்த கணவன்.

     


    சென்னையை அடுத்த பூந்தமல்லியில் கிழக்கு மாட வீதி பள்ளி தெருவைச் சேர்ந்த ஆனந்தராஜ்- நந்தினி என்ற தம்பதிகள் வாடகை வீட்டில் மேல் தளத்தில் வசித்து வந்தனர். 

    இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவிக்கிடையே நேற்று தகராறு ஏற்பட்டதை அடுத்து நீண்ட நேரமாகியும் நந்தினி வெளியே வராததால் சந்தேகமடைந்த வீட்டின் கீழ் தளத்தில் வசிக்கும் அவரது சகோதரி பவித்ரா போலீசில் புகார் அளித்தார்.

    இதனை அடுத்து விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மனைவி நந்தினியின் கழுத்தை கயிற்றால் இறுக்கியும்  மரக் கட்டையால் தாக்கியும்  கொலை செய்துவிட்டு மூன்று குழந்தைகளுடன் தலைமறைவாகினர்  என்பது  தெரியவந்தது.  இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு  செய்து ஆனந்தராஜை தேடி வருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad