Header Ads

  • சற்று முன்

    வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நல்லிரவில் கரையை கடந்தது


     

    வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை கரையை கடக்க தொடங்கியது.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், மாவட்டங்களில் நேற்று காலையிலிருந்து பலத்த மழை பெய்தது.

    சென்னை மற்றும் புதுச்சேரி இடையே சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவு 1:30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கியது. இதனால் விட்டு விட்டு கனமழை பெய்தது.

    வட தமிழகத்தின் மேல் நிலைகொண்டுள்ள தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்க கூடும் தாழ்வு மண்டலம் மேற்கு,  வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad