Header Ads

  • சற்று முன்

    நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைத்த கும்பல் - போலீசாரிடம் சிக்கியது

     


    நீட் தேர்வில் 25 பேரை ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைத்தேன்; நீட் மோசடி கும்பல் தலைவன் அதிர்ச்சி வாக்குமூலம்.

    இந்தியா முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் பல்வேறு மாநிலங்களில் மோசடி நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.


    இதனையடுத்து உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற தேர்வின்போது ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பல் மருத்துவ மாணவி மற்றும் அவரது தாயாரை போலீசார் கைது செய்தனர் அதேபோல் திரிபுரா வைச் சேர்ந்த ஒரு மாணவனுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மாணவியையும் போலீசார் கைது செய்தனர் இதற்காக அந்த மாணவிக்கு 5 லட்சம் கொடுக்கப் பட்டது என்று விசாரணையில் தெரியவந்தது

    இப்படி ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைப்பதற்காகவே ஒரு கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. இந்த கும்பலின் தலைவனான பாட்னாவில் சேர்ந்த பிரேம்குமார் என்பவரை வாரணாசி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.


    விசாரணையில் உத்தரபிரதேசத்தில் மட்டும் 25க்கும் மேற்பட்ட மாணவர்களுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதவைத்துள்ளதை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட 25 மாணவர்களின் நீட் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என போலீசார் தேசிய தேர்வு முகமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த ஆள் மாறாட்டம் குறித்து போலீசார் விசாரணை செய்ததில் நன்கு படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஏழை மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பணத்தாசை காட்டி தேர்வு எழுத வைத்தது விசாரணையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad