Header Ads

  • சற்று முன்

    அண்ணாமலையார் மகா தீபம் பற்றிய சிறப்பு தகவல்கள்…

    கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, நேற்று பிரசித்திபெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் குறித்த சிறப்புத் தகவல்களை பார்க்கலாம்.

    திருக்கார்த்திகை தீபக் கொப்பரையின் எடை 175 கிலோ. கொப்பரை 5 அடி உயரம், 3 அங்குலமும்,  2,500 லிட்டர் கொள்ளளவும் கொண்டது. மகா தீபம் 11 நாட்கள் மக்களுக்கு காட்சி தரும். இந்த 11 நாட்களுக்கும் சேர்த்து 7,150 கிலோ நெய் பயன்படுத்தப்படும். தீப திரியாக 1,200 மீட்டர் காடா துணியும், 22 கிலோ கற்பூரமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    11 நாட்களுக்குப் பின்னர் தீப கொப்பரை கோவிலுக்கு கொண்டுவரப்படும். மேலும் இந்த 11 நாட்களும் சேமிக்கப்படும் தீப மை, ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜ பெருமாள் நெற்றியில் திலகமாக வைக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad