Header Ads

  • சற்று முன்

    திரைத்துறையை விட்டுவிடுங்கள்- அன்புமணி ராமதாஸுக்கு பாரதிராஜா கடிதம்..

     


    சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் பேசுபொருளாகியுள்ள திரைப்படம் ‘ஜெய்பீம்’. கதையின் கரு இருளர் பழங்குடி மக்கள் படும் இன்னல்களை வெளிச்சமிட்டு காட்டியிருக்க, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் படத்தின் ஒரு காட்சி தங்கள் சமூகத்தை இழிவு படுத்துவதாக பாமக போர்க்கொடி தூக்கியிருக்கிறது.

    ஒருபுறம் போராட்டங்கள், வழக்குகள் என சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் களமிறங்கியிருக்கும் சூழலில், ஒரு படி மேலே சென்று சூர்யாவை தாக்குபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு என அறிவித்திருக்கிறார் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர். 

     

    பாமகவினர் இத்தகைய செயல்களுக்கு எதிராகவும், சூர்யாவுக்கு ஆதரவாகவும் பலரும் குரலெழுப்பி வருகின்றனர். திரைத்துறையிலும் சூர்யாவுக்கு ஆதரவு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அந்தவகையில், சூர்யா மீது வன்மம் காட்ட வேண்டாம் என தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் பாரதிராஜா,  அன்புமணி ராமதாஸுக்கு கடிதம் எழுதியுள்ளது.

    அந்தக் கடிதத்தில், “ எங்கள் திரைத்துறையை விட்டு விடுங்கள். யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை. சினிமாவை விட்டுவிடுங்கள். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துங்கள். இப்படியே போனால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்ல காத்திருக்க வேண்டுமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது. 



    பூதக்கண்ணாடியை அணிந்துகொண்டு குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும் எளியோருக்காக பேசாமல் முடங்கிவிடும். இன்றைய எளியோர்களின் சமத்துவ அதிகாரத்திற்காக அன்றே பேசியது நாங்கள்தான். திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக்கொள்கிறேன். 

    தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு பதில்சொல்லி தரத்தை குறைத்துக்கொள்ளாதீர்கள்.. - ரசிகர்களுக்கு வேண்டுகோள்..  

    ஒரு அலைபேசியில் முடிந்திருக்க வேண்டியதும் சிறு தவறுகளைச் சுட்டிக் காட்டித் தீர்க்க வேண்டியதுமான இப்பிரச்னையை எதிர்க்காற்றில் பற்றி எரியும் நெருப்புத் துகள்களாக்கியது ஏன் எனப் புரியவுல்லை..

    எதுவாக இருந்தாலும் எங்களோடு பேசுங்கள் சரியென்றால் சரிசெய்துகொள்ளும் நண்பர்கள் நாங்கள். எப்போதும் நட்போடு பயணப்படுவோம். நன்றி “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad