Header Ads

  • சற்று முன்

    மணக்கோலத்தில் தேர்வெழுதிய பெண்.. குவியும் பாராட்டு...

      


     

    குஜராத்தில் மணப்பெண் கோலத்தில் பெண் ஒருவர் தேர்வெழுதும் காட்சிகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


    குஜராத் மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 21 நாட்கள் தீபாவளி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது விடுமுறை முடிந்து, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இரண்டாம் பருவம் தொடங்கியுள்ளது. தற்போது சவுராஷ்டிரா பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் ராஜ்கோட் நகரிலுள்ள சாந்தி நிகேதன் கல்லூரியில் ,    மணமகள் உடையில் மணப்பெண் ஒருவர் தேர்வெழுத சென்றுள்ளார்.

    ஷிவாங்கி பாக்தாரியா என்ற அந்த பெண், சோசியல் வொர்க் பாடப்பிரிவில் இளங்களை பட்டம் படித்து வருகிறார். இவர் தனது 5-வது செமஸ்டர் தேர்வினை எழுத, தனது வருங்கால கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வந்திருக்கிறார். இதனை பார்த்த மற்றவர்கள் மற்றும் சக மாணவர்கள் ஆச்சரியமடைந்தனர்.  தேர்வு முடிந்த கையோடு மணமகள் நேரடியாக திருமண மண்டபத்திற்குச் சென்று சடங்குகளில் கலந்து கொண்டார்.


     

    திருமண தேதி நிச்சயிக்கப்பட்ட போது, தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை என்றும், தனது தேர்வு தேதியும் திருமணத்தின் முகூர்த்த நேரமும் ஒரே சமயத்தில் வந்ததாலும் மணமகள் உடையில் தேர்வு எழுத வந்ததாக ஷிவாங்கி கூறினார். மேலும், முகூர்த்த நேரத்தை பெற்றோர் தனக்காக சற்று நேரம் தள்ளி வைத்ததால், தன்னால் தேர்வு எழுத முடிந்தாகவும் ஷிவாங்கி தெரிவித்தார்.

    இந்த மணப்பெண்ணுக்கு கல்வியின் மீது உள்ள ஆர்வம் நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளது. திருமணத்தை தள்ளி வைத்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்த ஷிவாங்கிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்..

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad