Header Ads

  • சற்று முன்

    காரில் கடத்திய இளம்பெண்ணின் அலறல் சத்தம்- விரட்டி பிடித்த போலீசார்.

     


    சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் அதிகாலை 3 மணியளவில் அதிவேகமாக சென்ற கார் ஒன்றில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அந்த சாலையில் இலங்கை தூதரகம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த தேவசகாயம் என்ற காவலர் அந்த காரை மடக்கி நிறுத்தியுள்ளார். காரை சோதனை செய்தபோது காரில் இருந்த இளம்பெண் ஒருவர் கூச்சலிட்டுக் கொண்டே தனது செருப்பை எடுத்து உடனிருந்த இளைஞர்களை ஆவேசமாக தாக்கியுள்ளார்.

     

    உடனடியாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில் காரில் வந்த பெண் மென்பொறியாளர் என்பதும் போரூரில் தங்கி பணிபுரிந்து வரும் இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் புதன்கிழமை நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டதும் தெரியவந்தது.
     


    அப்போது விடுதியில் அறிமுகமான மின் பொறியாளர்கள் கௌதம், தீபக், சக்தி, ஆகிய மூவரும் பழக்கமாகி நட்பாகி பேசியுள்ளனர். அனைவரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதிகாலை 3 மணி அளவில் அந்த இளம்பெண்ணை அவர் தங்கியிருக்கும் அறையில் கொண்டு விடுவதாக கௌதம் கூறியதை நம்பி காரில் ஏறி சென்றுள்ளார். அப்போது காருக்குள் வைத்து அந்தப் பெண்ணிடம் கவுதம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், இதனை அடுத்து காரை நிறுத்தச் சொல்லி அவர் கூறியதாகவும், அத்தகைய சூழலில் தான் அந்தப்பெண்ணின் சத்தம் கேட்டு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மடக்கிப் பிடித்ததால் விபரீதம் நடக்காமல் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இளம்பெண்ணை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த கௌதம் என்பவரை போலீசார் கைது செய்தனர். கௌதம் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்ணை மானபங்கம் செய்தல், காயம் ஏற்படுத்துதல், மற்றும் மிரட்டி அவமதித்தல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். கௌதமனின் நண்பர்களான தீபக் மற்றும் சக்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad