Header Ads

  • சற்று முன்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : மாநில தேர்தல் ஆணையர் அதிகாரிகளுக்கு உத்தரவு

     

    தமிழகத்தில் நகர்ப்புறங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து மண்டல  ஆய்வுக் கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விழுப்புரம் ஆட்சியர் த.மோகன், காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி, கடலூர் மாவட்ட ஆட்சியர் கே.பாலசுப்பிரமணியன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் விஷூ மகாஜன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமை தாங்கி அவர் பேசுகையில் நகர்ப்புற தேர்தல் நடுநிலையுடன் பாதுகாப்புடனும் நடைபெற வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    இக்கூட்டத்திற்கு வந்துள்ள 6 மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இக்கூட்டத்தில் அளிக்கப்படும் பயிற்சிகளை முறையாக அறிந்து கொண்டு. தேர்தலில் பணியாற்ற வேண்டும் தேர்தல் பணி குறித்து ஏற்படும் சந்தேகங்களை வெளிப்படுத்தி இக்கூட்டத்தின் வாயிலாக தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad