Header Ads

  • சற்று முன்

    பாதுகாக்க வேண்டிய போலீஸே பாலியல் வன்கொடுமை செய்த அவலம்- மதுரை பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!!

     

    தலைமை காவலர் முருகன்


    மதுரை வில்லாபுரம் கதிர்வேல் நகரை சேர்ந்தவர் மகேஷ். இவர் அவனியாபுரத்தில் பைப் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். தனது கம்பெனியில் பணிபுரியும் தோழி ஒருவரை அழைத்துக்கொண்டு கடந்த 27-தேதி மாநாடு படம் பார்க்க செல்லூரில் உள்ள தியேட்டரில் நைட் ஷோ பார்த்துவிட்டு திரும்பியுள்ளனர். அப்போது நேதாஜி சாலை அருகே ரோந்து பணியில் இருந்த முருகன் என்ற தலைமை காவலர் அவர்களை இருவரையும் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்.

    இருவரும் கணவன்-மனைவி இல்லை என்பதை தெரிந்து கொண்ட அவர் மகிஷியை மிரட்டி 11,000 பணம் பரித்துக்கொண்டு அவரிடம் மேலும் 20 ஆயிரம் தரவேண்டும் என மிரட்டி அவரிடம் இருந்த ஓட்டுநர் உரிமம், ஏடிஎம் கார்டு, மொபைல்போன், ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு பெற்று செல்லும்படி மிரட்டியுள்ளார்.

    மகேஷ் உடன் வந்த அந்த பெண்ணை தன் வீட்டில் கொண்டு விடுவதாகக் கூறிய தலைமை காவலர் முருகன் அழைத்துச் சென்று அப்பகுதியில் உள்ள லாட்ஜில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்து விட்டு அதன்பிறகு பெண்ணை மிரட்டி ஆட்டோவில் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த அந்த பெண் சம்பவத்தன்று தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்ட நிலையில் சம்பந்தப்பட்ட காவல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் தலைமை காவலர் முருகன் மீது பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கற்பழிப்பு, கொலை மிரட்டல் விடுதல், பணம் பறித்தல், கடத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    இதனிடையே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தலைமை காவலர் முருகனை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad