Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் கன மழை தொடரும் - சென்னை வானில ஆய்வு மையம் தகவல்.


     

    குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும்   வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காராணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. 

    இந்நிலையில்  வங்ககக்கடலில் இன்று உருவாகும் என அறிவிக்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி , தாமதமாக நாளை  உருவாக உள்ளதாகவும், அதனால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஆனால் தமிழகத்தில் வருகிற 2 ஆம் தேதிவரை  மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அதோடு, அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாகவும், அது வடமேற்கு திசை நோக்கி நகரக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

    நாளை(நவ.30)  கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழையும்,  தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும்,  வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    \ அதேபோல் புதன்கிழமை(டிசம்பர் 1)  அன்று தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழை இருக்குமெனவும்,

    வியாழக்கிழமை (டிசம்பர் 2) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் , ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி,  காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad