Header Ads

  • சற்று முன்

    துடைக்கும் போது வெடித்த துப்பாக்கி நொடியில் உயிர் தப்பிய தொழிலதிபர்.

     


    சென்னை அடையாறு எல்.பி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பைரவி இவர் தோல் சிகிச்சை மருத்துவராக போயஸ் தோட்டத்தில் மருத்துவமனை வைத்து நடத்திவருகிறார். இவரது கணவர் செந்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யக்கூடியவர். தனது பாதுகாப்பிற்காக எப்போதும் தோட்டாக்கள் நிரம்பிய துப்பாக்கியை வைத்திருப்பது வழக்கம்.

    இந்நிலையில் சனிக்கிழமை இரவு மாடியில் மருத்துவர் பைரவி வீட்டில் துப்பாக்கி சத்தம் கேட்டது. இதனையடுத்து அருகில் வசிப்பவர்கள் சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.


    தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து வந்த போலீசார் பைரவி வீட்டிற்கு சென்று பார்த்தபோது தொழிலதிபர் செந்தில்குமார் இடது பக்க தோள்பட்டையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை உடனடியாக மீட்டு அப்பல்லோ அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து அவரிடம் விசாரனை செய்த போலீசார்
    துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது தவறுதலாக வெடித்து விட்டது என தெறிவித்தனர்.

    தோள்பட்டையில் பாய்ந்த துப்பாக்கி குண்டுகளை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்து அகற்ற இருப்பதாக மருத்துவ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad