Header Ads

  • சற்று முன்

    மழை வெள்ள ஆய்வின்போது ரோட்டு கடையில் அமர்ந்து தேநீர் அருந்திய ஸ்டாலின்.

     


    சென்னை புறநகரில் மழையினால் பாதிக்கப்பட்ட திருவேற்காடு, ஆவடி ஆகிய பகுதிகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்...

    சென்னை திருவேற்காடு பத்மாவதி நகரில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அப்பகுதியை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின்னர் பூவிருந்தவல்லி அம்மன் கோயில் தெரு, எம்.ஜி.ஆர்.நகர் பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் 2000 பேருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து ஆவடி சீராம் நகர் பகுதியில் ஆய்வு செய்த முதலமைச்சர், ஆவடி கோவர்தனகிரியில் சாலையோர டீ கடையில் அமர்ந்து டீ அருந்தினார். அதன் பின்னர் திருமுல்லைவாயில் கணபதி நகரில் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் 2000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். புறநகர் பகுதிகளுக்கு முதலமைச்சரின் வருகை, மக்களை நேரில் சந்தித்தது, ஆறுதல் கூறியது அனைத்தும் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad