Header Ads

  • சற்று முன்

    பூ போன்ற இட்லி கேட்டவருக்கு முழு தவளை இருக்கும் இட்லி கொடுத்த உணவகம்..

     


    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தலைமை அரசு மருத்துவமனையில் முருகேசன் என்பவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். முருகேசன் என்பவருக்கு உணவு வாங்குவதற்காக அவரது உறவினர் நேற்று காலை மருத்துவமனையின் அருகே உள்ள தனியார் உணவகத்தில் 4 இட்லிகளை பார்சல் செய்துள்ளார்.

    பார்சலை எடுத்துக்கொண்டு அவரது உறவினர் முருகேசனிடம் கொடுத்தபோது இட்லி பொட்டலத்தை பிரித்து பார்த்துள்ளார். அப்போது இட்லி ஒன்றில் இறந்த நிலையில் தவளை ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் உணவக உரிமையாளரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கடை உரிமையாளர் பயந்துபோய் இட்லிக்கு உரிய பணத்தை திரும்ப தந்து விட்டு இட்லி மாவையும் கீழே கொட்டிவிட்டு, கடையை மூடிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad