Header Ads

  • சற்று முன்

    இறந்த கன்று குட்டிகளை வைத்து சட்டப்பேரவை முன்பு தர்ணா.

    இறந்த கன்று குட்டி

    புதுச்சேரி சட்டப்பேரவை அருகே பால் வியாபாரி ஒருவர் இறந்த கன்றுகளுடன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது புதுச்சேரி சாரம் கவிக்குயில் நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சொந்தமாக பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் தனது மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி சொலுத்திருக்கிறார்.

    நேற்று மூன்று கன்று குட்டிகள் திடீரென உயிரிழந்த விட்டன இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சட்டசபை அருகே தனது கன்றுக்குட்டியை பைக்கில் எடுத்து வந்து திடீரென நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார் இந்த தகவலை கேள்விப்பட்ட புதுச்சேரி பால்வளத்துறை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்ட மேலும் சிலர் அவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    வழக்கமாக கோடை காலத்தின்போது போடப்படும் கோமாரி தடுப்பூசி இந்த ஆண்டுக்கான ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போனது இதனால் கடந்த சில வாரங்களாகவே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது இதற்கிடையே மழை பெய்து வருவதால் குளிர்காலத்தின் போது மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போட்டதனால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.


    தர்ணா போராட்டம்

    காலதாமதமாக தடுப்பூசியால், கால்நடை துறையின் அலட்சியத்தால், கன்றுகள் மற்றும் பசுக்கள் இருந்துள்ளதாகவும். இன்னும் சிலர் பயந்து கொண்டு வெளியே வராமல் இருப்பதாகவும். ராஜ்குமார் குற்றம்சாட்டி இருக்கிறார் அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டால் இல்லை என்று கூறுவதாகும் அரசு உரிய விளக்கம் அளிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

    பின்னர் நகராட்சி சார்பில் இறந்தவர்களை அடக்கம் செய்யவும் முதல்வரிடம் பேசி உரிய நிவாரணம் கிடைக்கப் பெற ஏற்பாடு செய்வதாகவும் பெரியகடை காவல் ஆய்வாளர் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad