Header Ads

  • சற்று முன்

    மச்சானை கரண்ட் ஷாக் கொடுத்து கொன்ற மாமன்!!

     


    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மிட்டாதார் குளம் மேற்கு திசையில் வசித்து வருபவர் பிரிட்டோ பணி குமார். இவரது மனைவி மரிய சோபா அவர் .இதே ஊரில் வசித்து வரும் டேவிட் ராஜா என்பவர் மரிய சோபாவின் சகோதரர் ஆவார். இவர் மீது பல வழக்குகள் உள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது அக்காவான மரிய சோபாவிடம் 30 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பணம் கொடுக்க மறுத்ததால் தனது அக்காவின் சேலையை டேவிட் ராஜா தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக சோபாவின் கணவர் ஆத்திரமடைந்து டேவிட் ராஜாவின் வீட்டிற்கே சென்று நீ இருந்தால் தானே எங்களுக்கு பிரச்சனை எனக்கூறி அவர் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் அவருடைய கைகளையும் கால்களையும் கட்டி உடம்பின் மீது கரண்ட் ஷாக் கொடுத்துள்ளார்.

    கரண்ட் ஷாக் கொடுத்தும் இறக்காத  நிலையில் அருகிலிருந்த கேபிள் வயரை எடுத்து டேவிட் ராஜாவின் கழுத்தை இறுக்கி உள்ளார் இதனால் டேவிட் ராஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியான பிரிட்டோ பண்ணி குமாரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad