Header Ads

  • சற்று முன்

    கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- தலைமறைவான மருத்துவர் மீது போக்சோ வழக்கு

     

    கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் சி.ஜி என்ற தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் பசுபதி பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர் கேஷியர் ஆக பணியாற்றி வருகிறார்.

    இவரது மகள் மருத்துவமனைக்கு அருகில் உள்ள பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் நிலையில் பள்ளி முடிந்தவுடன் தனது தாயை பார்ப்பதற்கு அடிக்கடி மருத்துவமனைக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    இந்த நிலையில் அதே மருத்துவமனையில் ரஜினிகாந்த் என்ற மருத்துவர் பணியாற்றி வருகிறார். தன் மகள் வருவதை நோட்டமிட்டு  ஒரு நாள் அவள் வரும் பொழுது தனது அறையில் வைத்து மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அப்பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதன் அடிப்படையில் போலீசார், பாலியல் தொல்லை அளித்ததாக தனியார் மருத்துவமனை மருத்துவர் ரஜினிகாந்த் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர் ரஜினிகாந்த் தலைமறைவானார்.

    அதே மருத்துவமனையில் மேலாளராக பணி புரியும் சரவணன் என்பவரும் அதற்கு உடந்தையாக இருந்தார் என அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் சரவணனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில்  தலைமறைவான மருத்துவர் ரஜினிகாந்தை போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad