Header Ads

  • சற்று முன்

    விபத்தில் உயிரிழந்த ஆர்.டி.ஒ ஆய்வாளர் - விசாரணையில் சிக்கிய வாகனம்

     


    கரூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ். அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்த வழக்கில், மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் மகேந்திரா மேக்ஸி என கண்டுபிடித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை இனுகூர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் வயது 57  இவர் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கனகராஜ் மேட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலை  9:30 மணிக்கு கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெங்கல்பட்டி பிரிவு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக மகேந்திரா மேக்சி கேப் வேன் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது தணிக்கை செய்வதற்காக எதிரே நின்று சைகை காண்பித்துள்ளார் கனகராஜ். ஆனால், அவர் மீது மோதிய வேன் நிற்காமல் சென்றுவிட்டது. வேன் மோதியதில் தூக்கி வீசப்பட்ட கணகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து 10 பேர் கொண்ட 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில் கனகராஜ் மீது மோதிய  வேன் டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கூலி ஆட்களை அழைத்து வரும் வேன் என்பது தெரியவந்தது.

    நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் வேன் அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்த போலீசார், அதன் பதிவு எண்ணைக் கொண்டு தோகைமலை அடுத்த கழுகூரில் வேனை கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளனர். தலை மறைவான வாகனத்தின் உரிமையாளர் சுரேஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad