Header Ads

  • சற்று முன்

    மகா தீபத்தை தரிசிக்க மலை உச்சிக்கு சென்றவர் மரணம்.

     


    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத்தொடர்ந்து கோவிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மாலை 6 மணி அளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது.  இந்த மகா தீபமானது மலை உச்சியில் 11 நாட்கள் காட்சியளிக்கும்.

    நேற்று 6-வது நாளாக மகா தீபம் சுடர் விட்டு எரிந்து காட்சியளித்தது. மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை தரிசிக்க பக்தர்கள் யாரும் மலைக்கு செல்லக் கூடாது என ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பக்தர்கள் பலர் தடையை மீறி மலைக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.



    இந்நிலையில் சேத்துப்பட்டு தாலுகா கங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை வயது (30) இவர் நேற்று மாலை தடையை மீறி மலைமீது ஏறிச் சென்று உள்ளார் மலை மீது ஏறும் அனுபவம் இல்லாத இவர். மகாதீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வரை சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    நேற்று இரவு மலையிலிருந்து திருப்பணி ஊழியர்கள் கீழே இறங்கி வரும் வழியில் துரை  பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் காவல்துறை ,தீயணைப்புத் துறை, வனத் துறை, ஆகிய மூன்று துறைகளும் விரைந்து சென்று மலையின் உச்சியில் இறந்துகிடந்த துரையின் உடலை மீட்டு  சுமார் அதிகாலை 3 மணி அளவில் மலை அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டது .

    இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad