Header Ads

  • சற்று முன்

    கார் கிணற்றுக்குள் கவிழ்ந்து தந்தை மகள் உயிரிழப்பு...

     


    சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த வீரன் என்பவர். பெங்களூரில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி உமாலட்சுமி  மற்றும் மகள் சுஷ்மிதா ஆகியோருடன் தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு,  மீண்டும் பெங்களூரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார் இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பொன்னேரி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த 60 அடி அழ கிணற்றுக்குள் பாய்ந்தது.

    இதில் அதிர்ஷ்டவசமாக உமாலட்சுமி காரின் கதவை திறந்து வெளியேறியிருக்கிறார்.  தண்ணீரில் தத்தளித்த அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றினர். வீரன் மற்றும் சுஷ்மிதா வெளியேறுவதற்கு முன்னதாக கார் 60 அடி ஆழத்திற்கு சென்றுள்ளது.

    தகவலறிந்து வந்த தர்மபுரி தீயணைப்புப் படையினர், சுமார் 6 மணி நேரம் போராடி இருவரது உடல்களை மீட்டனர். கார் கிணற்றில் விழுந்து தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad