Header Ads

  • சற்று முன்

    3 வேளாண் சட்டங்களும் வாபஸ்.. - பிரதமர் மோடி அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி..

     


    மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி, உத்தரப் பிரதேசத்தின் மகோபா பகுதியில் நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை இன்று தொடக்கி வைக்க உள்ளார். முன்னதாக நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றிய போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

    அவர் மேலும் பேசியதாவது, “ அனைவருக்கும் குருநானக் ஜெயந்தி வாழ்த்துகள். நாட்டு நலனுக்காக வேளாண் துறையில் பல்வேறு சீர்த்திருந்தங்களை கொண்டு வந்தோம். விவசாயிகளின் நலனுக்காக  புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தோம். சிறு விவசாயிகளின் முன்னேற்றத்திற்கும், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவுமே இந்த சட்டங்களை கொண்டு வந்தோம். மேலும் விவசாயிகளிடம் ஆலோசனை நடத்திய பிறகே இந்த சட்டங்களை அமல்படுத்தினோம்.

    ஆனால் வேளாண் சட்டங்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பி விடப்பட்டன. விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு புரிய வைக்க பல முயற்சிகள் எடுத்தும், தோற்றுவிட்டோம். வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில், இந்த சட்டங்களை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு தங்களது வீடுகளுக்குச் செல்ல வேண்டும்.” என்று கூறினார். 

    பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பினை விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இந்த வெற்றியை உயிரிழந்த விவசாயிகளுக்கு சமர்ப்பிப்பதாக பஞ்சாப் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

     

     

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad