Header Ads

  • சற்று முன்

    அரசுப் பேருந்தின் படிகட்டு உடைந்து விபத்து- நொடியில் உயிர் தப்பிய மாணவர்கள்!

     


    அரசுப் பேருந்து ஒன்று, பயணிகளுடன் மயிலாடுதுறையிலிருந்து பொறையார் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஏராளமான மாணவர்கள் படியில் தொங்கியவாறு பயணம் செய்தனர். தரங்கம்பாடி அருகே சென்று கொண்டிருந்த போது  யாரும் எதிர்பாராத நிலையில் பேருந்தின் பின்பக்க படிக்கட்டின் ஒரு பகுதி உடைந்து கீழே விழுந்தது.

    இதனை அடுத்து மாணவர்கள் கூச்சலிடவே ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதால் படியில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் பேருந்தின் கம்பியை பிடித்து அதிர்ஷ்டவசமாக தப்பித்தனர். நடுரோட்டில் உடைந்து கிடந்த படிக்கட்டின் ஒரு பகுதியை நடத்துனர் எடுத்தபின் பேருந்து மீண்டும் இயக்கப்பட்டது


     

    அதிகாரிகளின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பெரும்பாலான அரசுப் பேருந்துகளின் நிலை மோசமாக இருப்பதாகவும், போக்குவரத்துக் கழகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவற்றை சரி செய்ய வேண்டும் எனவும் அவர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad