Header Ads

  • சற்று முன்

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை


     

     

    வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதியிலும் அதி கனமழைக்கான( ரெட் அலெர்ட்) வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

     

    மேலும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கு கன மழை முதல் மிக கன மழை பெய்வதற்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


     

     

    ஏனைய தமிழக மாவட்டங்களில் சேலானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்  சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

     

    காலை 10 மணி நிலவரப்படி வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதி புதுச்சேரியில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 300 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad